யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் செட்டித்தெரு நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சரவணமுத்து அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானை, சோதியம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கலையரசி, சாந்தி(கனடா), யேந்தி(ஜேர்மனி), சந்திரா(ஜேர்மனி), வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறிகிஸ்ணகுமார்(கோபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிகந்தராயா(சிறி- கனடா), பாஸ்கரன்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), சுரேந்திரகுமார்(சுரேன் -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், தர்மலிங்கம், இராசமணி, தேசிங்குராசா மற்றும் பவளம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தையா, சரஸ்வதி வெள்ளச்சாமி, இராசலட்சுமி, பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான இராசையா, சுப்பிரமணியம், யோகம்மா, செல்லமுத்து, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாளினி, கீர்த்தன், அபர்ணா, கார்த்திகைதீபன்(கார்த்தி), அன்பு, ஜீவா, திவ்வியன், கார்த்திகா, சகானா, சங்கீதா, சுஜி, சூரியா, சோனியா, றஜீ, டினேஸ்குமார்(கோபி), றயீத்குமரன், அரிகரன், இளஞ்செழியன், கீர்த்தனா, ஜெஜிதா(கீதா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றேன்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.