Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 24 MAR 1948
உதிர்வு 24 JUN 2019
அமரர் செல்லர் அருளானந்தராஜா
ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர்
வயது 71
அமரர் செல்லர் அருளானந்தராஜா 1948 - 2019 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் பறாளாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லர் அருளானந்தராஜா அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லர், நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

இராகினி(சூட்டி- பிரித்தானியா), இராகவன்(வெள்ளைத்தம்பி- சுழிபுரம்), ஜனார்த்தனன்(சின்னை- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருளானந்தம்(பிரித்தானியா), கார்த்திகா(சுழிபுரம்), ஸ்ரீதேவி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தியாகராசா, மற்றும் நவரட்ணராசா, சின்னராசா, அருந்ததிதேவி, நிர்மலாதேவி, புஷ்பதேவி, இரவீந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிரானி, மற்றும் பாப்பா, சுந்தரி, சின்னம்மா, ஒளவை(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சுரேக்கா, சுகேசன், அபிர்ணா, அபிசா, ரவீனா, கஜனி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 24 Jul, 2019