யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா உதயணன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
மறக்க முடியாத, இறக்கவேண்டாத மனிதனின் இழப்பு! அளவெட்டியில் பிறந்து, கொழும்பில் அரசகடமையில் இருந்து, புலம்பெயர்வில் ஜேர்மனியில் வாழ்ந்து உயிரை மட்டும் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காற்றில் கரையவிட்டு.. எம்மோடு என்றும் நினைவில் வாழும் தகவினன் அமரர் உதயணன்
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ற
பெருமை உடைத்தில் உலகு"
(குறள் 336 அதிகாரம் 34)
நேற்றுவரை இருந்த அந்த நல்ல மனிதன் இன்று
எம்முடன் இல்லயே என்று ஏங்கும்
மனிதர்களின் ஏக்கம் மட்டுமே வாழ்வின் சம்பாத்யம்.
இதை நூறு வீதம் வாழ்ந்து காட்டியவர் அமரர் உதயணன் அவர்கள்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஜேர்மனிய மொழிகளில் வாழ்வியலுக்கான அனைத்தையும் விளங்கவும், விபரிக்கவும் முழு ஆற்றால் பெற்றிருந்ததால் அவர் அனேகருக்குப் பயன்பட்டார்.
அகதி அந்தஸ்து கோருபவர், வேலை இழந்தவர், குடும்பம், பிள்ளைகளின் பிரச்சினை, பிரிவுத்துயர் அனுசரணை என அவரை அணுகி அவர் உதவ முடியாத ஒரு துறையும் இல்லை! அகதி அந்தஸ்து விண்ணப்பதாரிகளில் அனேகர் வீடுகளில் எரியும் அடுப்புகள் இந்த நல்லமனிதனின் பேருதவி. நான்கு தசாப்தங்களாக நம் நகரின் நடுகல்லாக - அருகில் வருவோரின் அவலங்களை சேர்ந்து சுமந்து ...
இறக்கி வைக்க எப்போதும் தயாராக இருந்தவர்.
நிலைத்த கருத்துக்களிலும் எடுத்த முடிவுகளிலும் சமரசத்துக்கு இணங்காதவர், ஏன்தெரியுமா, உதயணன் உள்ளத்தை ஒழித்து வைத்து உபன்யாசம் பண்ணும் மனிதன் அல்லர். மனதில் பட்டதை கருத்தில் சொல்லும் மாவுரம் பெற்ற பண்பாளன்.
இப்படி ஒரு மானிடத்தை இனி எப்போ காண்போம்? என்ற வேணவாவை விட்டு விடை பெற்ற அமரர் உதயணனுக்கு எங்கள் இதயம் சார்ந்து கையசைத்து வழியனுப்புகின்றோம்.
சென்று வா நண்பனே !!!
இவ்வண்ணம் ஜெர்மனி நொயிஸ் நண்பர்கள்