11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லப்பா சுந்தரலிங்கம்
பூர்ணா டிஸ்பென்சரி -அரியாலை நல்லூர்
வயது 71
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பூநகரியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அரியாலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த Dr.செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ..!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 11 ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா ..!
ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
பார்த்தாலும்! பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே
அப்பா..!
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்..!
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்