

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவரத்தினசிங்கம் அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா(பிள்ளையார் ஆச்சாரியார்) இரத்தினம் அம்மையார் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கலைஞர்திலகம் ஸ்தபதி. சி. நவரத்தினம் தவமணிதேவி தம்பதிகளின் தலைமருமகனும்,
செல்வாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கவிஞர். ஸ்தபதி. சண்முகநாதன், ஆச்சாரியார் தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜேந்திரன்(கனடா), ஜெயந்திரன், நிவாசினி, யதுர்சிகன் ஆகியோரின் அன்பு குட்டிச் சித்தப்பாவும்,
செல்வேந்திரன், செல்வசிறி, செல்வமனோகரி, செல்வசுதன்(கனடா) ஆகியோரின் அன்பு குட்டிமாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9.00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் 12:00 மணியளவில் அவரது சொந்த ஊரான மயிலிட்டி கொற்றாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details