2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லப்பா கனகரத்தினம்
1942 -
2024
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 29-01-2026
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா கனகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு
ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும்
அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும்
உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புகள்
என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்