Clicky

5ம் ஆண்டு, 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லபாக்கியம் கந்தசாமி அமரர் செல்லப்பா கந்தசாமி
இறப்பு - 10 FEB 2019
அமரர் செல்லபாக்கியம் கந்தசாமி அமரர் செல்லப்பா கந்தசாமி 2019 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லபாக்கியம் கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் செல்லப்பா கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்ந்த நாட்களை
 வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
 உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
 உடைந்தது எங்கள் இதயமும்தான்!
 நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
 நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!

அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
 என்புருக ஏங்கிட்டு பார்க்க
 எம்மை துயரிலே மூழ்க வைத்து
 பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?

சோகத்தின் சுமைதனை
 சுமக்கின்றோம் இதயமதில்
 பாசத்தின் உறவுகள் நாம்
 பரிதவித்து வாடுகின்றோம்
 நேசத்தை மறந்து ஏன்
 இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்? 

தகவல்: குடும்பத்தினர்