1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லன் சிவசரவணமுத்து
வயது 46
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லன் சிவசரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க கண்டது
எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்!!
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் ஐயா!!!
நாங்கள் கலங்கி நின்றாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தினர்!!
தகவல்:
குடும்பத்தினர்