யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து குணரெட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இந்த உலகில் உண்மையான
பாசத்திற்கு கிடைக்கும் பரிசு
கண்ணீர்த் துளிகள் மட்டுமே!!!
உன்னையே தேடும் என் கண்கள்
அம்மாவென அழைத்திட ஆசைபெருகிடுமே
அம்மா இன்று இல்லையென
கண்கள் நிறைகிறதே
உயிர் தந்து உருவம் தந்து வளமான வாழ்வுக்கு ஒளிதந்து
கல்வியுடன் நற்பண்புகளை ஊட்டி வளர்த்த அன்னையே
கொடிமரம் சாய்ந்தது போல் எம்மை விட்டு மறைந்தீரோ
மாதம் ஒன்று ஓடி மறைந்திட்டாலும்
மறப்போமா எங்கள் அன்னையை
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், தொலைநகல் மூலமும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், அதிகாலை வேளை நேரத்தை பொருட்படுத்தாது வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.