Clicky

பிறப்பு 07 APR 1940
இறப்பு 24 AUG 2021
அமரர் செல்லம்மா இராசரத்தினம்
வயது 81
அமரர் செல்லம்மா இராசரத்தினம் 1940 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellamma Rasarathinam
1940 - 2021

அன்புள்ள பெரியம்மா. எனது அம்மாவின் சகோதரியாக இருந்தாலும் சிறுவயதில் சொந்த அம்மாவை இழந்த பின்பு எனது அம்மாவை தாயைப்போல் பார்த்துக்கொண்ட பெரிய மனது கொண்ட பெரியம்மா எங்களை விட்டு எங்கே போனீர்கள். நாங்கள் கொழும்பில் இருந்து அகதியாக வந்த பொழுது எங்களுக்கு விருப்பமான தேங்காய் ரொட்டியும் சம்பலும் ஆசை ஆசையாய் செய்து தரும் அன்பு தெய்வமே! எங்களை விட்டு எங்கு சென்றீர்கள் . எமது அம்மா லண்டனிலும் நீங்கள் கனடாவிலும் சுகமாக இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடவுள் உங்களை அதிவிரைவாக தன்னிடம் அழைத்துக் கொண்டான் . சென்று வாருங்கள் பெரியம்மா. நீங்கள் இறைவனடி சேர்ந்த பின்பு எங்களை வாழ்த்துங்கள். பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை மனதார வாழ்த்துங்கள். தெய்வத்துடன் தெய்வமாக வணங்கி வழி அனுப்புகின்றோம் மனத்தாங்கல் உடன். உங்கள் மறைவால் வாடும் குமார் கௌரி குடும்பம் ரதி சிவபாலன் குடும்பம் சூரி விஜி குடும்பம் ராஜ்குமார் செல்வம் குடும்பம் மற்றும் உங்களின் ஒரே ஒரு கடைசித் தங்கச்சி ஞான பூங்கோதை கந்தசாமி.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 25 Aug, 2021