யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
சி. வினாயகர் ஸ்ரோர் உரிமையாளர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
திதி: 30-12-2025
எங்கள் வாழ்வுக்கும் வள்ர்ச்சிக்கும் ஒளிதந்த
குடும்பத்தலைவியாய், அன்பு நிறைந்த அன்னையாய்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
பிரிவு என்னும் துயரக்கடலில் எம்மை தத்தளிக்க
விட்டு சென்றாய்- அம்மா
எங்கள் துன்பங்கள் துயரங்களின் ஆறுதல் சொல்ல
ஆளில்லாமல் தவிக்கிறோம்- எங்கள் அம்மா
உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் இதயத்தில்
இன்று நீங்கள் எங்களுடன் இருந்திருந்தால்
அகவை தொண்ணூற்றி ஐந்தை
பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாய்
கொண்டாடி மகிழ்ந்திருப்பாய்- அம்மா
பதினைந்து ஆண்டுகள் கரைந்ததம்மா
உன் அன்பு முகம் எம் இதயங்களை
விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள்
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும்
உன்னை போன்று
அன்பு செய்ய
யாரும் இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!