யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach, Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லமாணிக்கம் கணேசலிங்கம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
நல்லூர் மண் பெற்றெடுத்த நாயகனே கணேசா!
காலன் கவர்ந்த செய்தி மேதினியில்
கேட்கையிலே மேனியெல்லாம் நடுங்குதையா கணேசா!
செல்லமாணிக்கம் தம்பதிகள் பெற்றெடுத்த
மாணிக்க மணிமகுடமே கணேசா!
அன்பால் அரவணைத்து பண்பால் பழகி
அனைவரையும் கொள்ளைகொண்ட கணேசா!
காணுமிடமெல்லாம் கனிவான புன்னகையை
உன் உதட்டினிலே சிந்துவாயே கணேசா!
பாரினிலே மற்றவர் குறைகாணா மாணிக்க மகுடமே கணேசா!
காலத்தால் அழியாத காவிய நாயகனே கணேசா!
காலமெல்லாம் காத்திருப்போம் இப்புவியில்
உன் நாமம் உள்ளவரை கணேசா!
சிரித்த முகமும் சீர் கொண்ட பார்வையும்
கனிவான பேச்சும் கம்பீரத் தோற்றமும்
உன் அடையாளமே கணேசா!
வருவாய் என்று பேரப்பிள்ளைகள் பார்த்திருக்க
அப்பா எங்கே என்று உன் செல்லப்பிள்ளைகள் காத்திருக்க
அன்பு மனையாள் உன் வரவைத் தேடி நிற்க எங்குதான்
சென்றாயோ மாணிக்க மகுடமே கணேசா!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு
அன்னாரின் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுக்கும்
மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த மனக்கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
றோசாக், கோல்டாக், றோசாக் பேர்க் வாழ் தமிழ்மக்கள் சார்பில்
Our deepest condolences.