1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-07-2024
பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும்
பாரில்
இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு ஒன்று ஆனதோ அம்மா...!
நேசத்துக்கு என எங்களைப்
பெற்றெடுத்து
ஆளாக்கி
பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு
ஆண்டு ஒன்று ஆனதோ !
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை
பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட
உங்களின்
ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!
தகவல்:
தவராஜா(மகன் - கனடா)