10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா வீரசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் வடிவமே அறிவின்
சிகரமே பண்பின் பிறப்பிடமே
பாசத்தின் இருப்பிடமே
எங்கள் எல்லோரையும்
வாழவைத்த அன்புத் தெய்வமே!
நாட்கள் வாரமாகி வாரங்கள்
மாதமாகி மாதங்கள் பல
ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை
எங்கள் துயர்
உறுதியின்
உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!
உங்கள் வார்த்தைகள்
எம்மை
வாழவைக்கும் உங்கள்
நினைவுகள் எம்மை வாழ்த்திடும்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்