

யாழ். துன்னாலை வடக்கு வல்லியானந்தப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி துன்னாலை கிழக்கு குடவத்தை பிள்ளையார் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சுப்பிரமணியம் அவர்கள் 05-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் மற்றும் மணிவண்ணன், கமலாசனி, மதிவானன், கமலவல்லி, செல்வமலர், இராமச்சந்திரன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, கந்தசாமி, தில்லைநாதன், சிவமோகன், நவரட்ணம், இராமகிருஷ்ணன் மற்றும் இரட்ணசோதி, நாகபூசணி, செம்மனச் செல்வி, அருள்முகவரதன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இம்மானுவெலா, ஜெயரட்ணம், திகழ்மதி, யோகராஜா, கருணாகரன், சியாமளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜீபன், பிரதீபன், கௌசிகன், டிலோஜன், முகுந்தன், காருண்யா, அரவிந்தன், கிதுசனா, யசோதிகா, சுகிர்ராம், சிவராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.