Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 DEC 1950
மறைவு 31 AUG 2021
அமரர் செல்லையா கிருஸ்ணபிள்ளை (சுதாகர்)
உரிமையாளர்- நிமல் ஏஜென்சி
வயது 70
அமரர் செல்லையா கிருஸ்ணபிள்ளை 1950 - 2021 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லதா, உதயலதா(கனடா), பிரதீபா(லண்டன்), சோபா, நிமலவர்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுப்பிரமணியம், கிருஸ்ணகுமார்(கனடா), கேதீஸ்வரன்(லண்டன்), சிவகுமாரன்(கனடா), தர்ஷனி(இ.மி.ச. திருகோணமலை) ஆகியோரின் மாமனாரும்,

நடராசா, தங்கம்மா, இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, நமசிவாயம் மற்றும் பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷந்தா, காலஞ்சென்ற லக்‌ஷனா, விதுர்சனா(கனடா), சதுர்சனா(கனடா), கனிஷன்(கனடா), வருணிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

வீட்டுமுகவரி:
இல. 37, 1ம் ஒழுங்கை,
லிங்கநகர்,
திருகோணமலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயா - மகள்
கிருஸ்ணகுமார் - மருமகன்
தீபா - மகள்
நிமல் - மகன்