Clicky

41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 SEP 1944
இறப்பு 02 MAR 2026
திரு செல்லையா தவராசா
புங்குடுதீவு பெருங்காடு கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா
வயது 81
திரு செல்லையா தவராசா 1944 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்தையன் கட்டு, கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தவராசா அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே

எங்கள் குடும்ப தெய்வமே.!
நாட்கள் 41 கரைந்தோடிய போதும்
உங்கள் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை

வரமாக எமக்கு கிடைத்த ஐயா
வளமாக எமைக் காத்த ஐயா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்

எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.