
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கண்ணுத்துரை அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசவுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன்(லண்டன்), சுகிர்த்தா(லண்டன்), சுமாலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜனி(லண்டன்), ஜீவரட்ணம்(லண்டன்), ஸ்ரிபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, பாலசிங்கம், பூமணி, சிவஞானம் மற்றும் தவமணி, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான உலகேஸ்வரன் மற்றும் இரகுநாதன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன், சிவயோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், சங்கீத், அபிஷா, அபிரா, அஸ்வரா, இனோக், ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவில் உள்ள பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்....உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம்