
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குணரத்தினம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Lausanne யில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மைலர் பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஞானறஞ்சன்(றஞ்சன்- சுவிஸ்), குணறஞ்சினி(அனிலா- லண்டன்), குணலோஜினி(லோஜினி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், விஜயரத்தினம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
பத்மாம்பிகை(அம்மன்- சுவிஸ்), நவரத்தினராசா(நவம்- நோர்வே), ஸ்ரீஸ்கந்தவேல்(குஞ்சன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அற்புதசெல்வராசா(கனடா), அற்புதசெல்வநாயகி(ஜேர்மனி), அற்புதசெல்வநாயகம்(இலங்கை), மோகனரூபன்(கனடா), ஞானறூபி(கனடா), காலஞ்சென்றவர்களான அற்புதசெல்வராணி, ஞானறூபன் ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,
சஜித்தா, சஜித்தன்(சுவிஸ்), மதுரா(இலங்கை), சகானா, அபினகா, அஜித்விஜித்(லண்டன்), நிசாந்தினி, நிசாந், நிவேந், நிகாந்(சுவிஸ்), கரி சுதர்சன்(இலங்கை), பிரசன்னா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சேரன், கயல், கண்ண ம்மா(சுவிஸ்), ஜானுஷா, ஜேஷ்வா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிராத்திக்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.