யாழ். வருணன் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Village Neuf ஐ கொண்டிருந்த செகராஜசேகரம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:17/04/2024.
குடியிருந்த கோயிலே குலம்விளங்கிட நின்றதாயே!
மடியில் வைத்தெமை சீராட்டிப் பாராட்டி வளர்த்தாய் அம்மா!
குணத்திற்கு குலவிளக்காய் குண்றாத மணிவிளக்காய்
கனம்பண்ணிக் குலாவிவந்த காலம்தான் எங்கே
உற்றார் உறவினர் நண்பரென்று உரிமையாய் பாசத்துடன் நடந்தாயே!
நற்சேவைகள் செய்ய வேண்டும் என்று
நலமாகவும் எமைவளர்த்த அம்மா !
பலசேவைகளைச் செய்யவைத்தும்
பாராட்ட நின்று மகிழ்ந்தாய்
ஓராண்டும் முடிந்ததே மறுவாண்டும் வந்ததே
மாறாத துன்பத்தில் குறுகிப் போனோமே
எப்பிறப்பில் காண்போம் எம் பாசதீபத்தை
தீபத்தை ஏற்றி சுடரினிலே ஒளிரவைத்தோம்
பரமனடி சேர்ந்தாயம்மா
பரம ஈஸ்வரியாக
பாதமலர் பற்றினோம் உன் ஆத்மா சாந்திக்காக....
போற்றினோம் தாயே!
மீண்டும் உன் நினைவினில் நாமே....!
Our Heartfelt Condolence. Tharmini & Sivabalan Switzerland