யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரத்தினம் பரந்தாமன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உயர்திரு.சீவரத்தினம் பரந்தாமன்
அவர்களுக்கு எமது கண்ணீரை காணிக்கையாக்குகின்றோம்.
உற்றவனே உறவாய் இணைந்தவனே
கற்றவனே கடமையுணர்வுள்ளவனே
பண்பில் பெரியவனே பரந்தாமன் ஐயாவே!
பற்று வைக்க பிரிவைத் தந்தவனே
சாற்றுகின்றோம் எம் கண்ணீரை அர்ப்பணமாய்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Beloved ret PM Param Anna's family accept our heartfelt condolences. Chankanai Kulanayagam Rtd PM ,Notary Public German Red Cross,Bremen Germany