

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பல்லவராஜன்கட்டை மாதிரிக் கிராமத்தை வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சீனித்தம்பி தம்பித்துரை அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமிர்தலிங்கம்(தவம்- சுவிஸ்), புஸ்பராணி(ராதா- சுவிஸ்), புஸ்பநாதன்(ரவி- சுவிஸ்), காலஞ்சென்ற யோகராணி(யோகா), ஜெயராணி(தயா- சுவிஸ்), விஜயராணி(நித்தியா- லண்டன்), குகநாதன்(ரகு- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிறஞ்சலா, தனேந்திரராசா, ராசரதி, சுதாகரன், அனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னத்தம்பி, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பூமாதேவி, காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பரமசிவமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி(லண்டன்), மார்க்கண்டு, பத்மசோதி, புஸ்பமலர்(ஜேர்மனி), குமுதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்சனா, கீர்த்திகன், ரசிக்கா, வைஷகா, வைநதி, வாமணன், அக்விஸ், அஸ்வின், நர்மதா, திவிந்தன், கிருஸ்திகா, சியானா, ஷெரினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.