
மன்னார் வஞ்சியன் குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகுஞ்சுக் குளம், மாதாகிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சீமான் பேதுரு அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீமான் செபமாலை தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்தான் பரியாரி இன்னாசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிணுகப்பு அவர்களின் அன்புக் கணவரும்,
யேசுதாசன்(சுவிஸ்), பெர்னதேத், காலஞ்சென்ற சத்தியதாஸ், அதிரியான், கொல்வீனஸ், கொன்சால்வெஸ், அருணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோமதி(சுவிஸ்), அற்புதநாதன், மேரிஜெகாந்தினி, பரமேஸ்வரி, மனோ, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செபமாலை, ஞானப்பிராகாசம், அருளப்பா, காலஞ்சென்ற மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு, அந்தோனியா, சுவக்கீன் மற்றும் மதலேனா, ஆனாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டீன்(சுவிஸ்), டெமி(சுவிஸ்), லக்கிற்றா(சுவிஸ்), ஆத்மா(சுவிஸ்), அருண், அலன், அபிசன், நிரோஷன், ஐஸ்வர்யா, ஜோர்டன், சார்ல்ஸ், சாருஜன், சரண்யா, வளன், மிதுஷன், ஜதுர்ஷன், சஜித், ஜொஸ்லின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்திலும், பெரியகுஞ்சுக்குளம், புனித அங்காமத்து மாதா ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் பெரியகுஞ்சுக்குளம் புனித அங்காமத்து மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு நேரிலும், சமூகவளைத்தளங்களிலும் ஆறுதலும் அனுதாபமும் பகிர்ந்து கொண்ட உறவினர் நண்பர்களுக்கும், அன்னாரின் இறுதி நிகழ்வில் பங்குகொண்ட ஊரார், உற்றார், உறவினர், நண்பர்கள், பங்குதந்தை, ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக நண்பர்கள், எங்கள் தந்தையின் அபிமானிகள் ஆகியோரிக்கு அன்னாரின் குடும்பம் என்றும் நன்றியுடையோம்.
அன்னாரின் 8வது நாள் நினைவாக 26-03-2022 சனிக்கிழமை அன்று மு. ப 7:00 மணியளவில் பெரியக்குளம் புனித அங்காமத்து மாதா தேவலாயத்தில் இடம்பெறும் ஆத்ம சாந்தி திருப்பலியிலும் அதனைத் தொடர்ந்து சிறு உபசார நிகழ்விலும் கலந்து அவருக்காக பிராத்திக்குமாறு அனைவரையும் வேண்டிநிற்கிறோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details