
யாழ். புலோப்பளை கிழக்கு பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீமாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீமாம்பிள்ளை, அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிசிலியா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செபமாலை, ஆசீர்வாதம் செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எட்வின் றொபேட்(வசந்தன்- கனடா), எட்வின் மரீனா(சுமதி- கனடா), எட்வின் ரெஜினா(கோமதி- கனடா), எட்வின் மடோனா(பாமா- அவுஸ்ரேலியா), எட்வின் வதனா(சுதா- கனடா), அன்ரன் றொபேட்(அன்ரன்- லண்டன்), எட்வின் கிறிஸ்டினா(டுசி- கனடா), யூலின் றொபேட்(யூலின்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பற்றீசியா, மரியநாயகம்(அழகு), அன்ரன் ஜோர்ஜ், அருட்பிரகாசம்(செல்வம்), ராஜசிறிதரன், இந்துமதி(இந்து), ஆம்ஸ்ரோங், சுமி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆஷ்லி, பிரக்சன், நிஷா, பிறீனா, ஆன்சலா, பிறின்சன், ஆஸ்ரன், மிதுளன், பிறின்சன், மான்சி, அலன், கெவின், அல்ரின், நிலக்சன், றிகான், சாராராணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்டு புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித இராயப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.