

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மதவுவைத்த குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை சிரோண்மணி அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், விசாலாட்சி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற தம்பியா அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தவசீலன்(கனடா), மயூரன்(கனடா), மதிபாலன்(பிரான்ஸ்), றாகினி, தரிசினி ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,
பிரகாஸ், சதீஸ், லயந்தா, ஜஸ்பேரியா, மேகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனபாலசிங்கம் நிர்மலா(சுவிஸ்), இராசநாயகம், காலஞ்சென்ற ரஞ்சினி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம் சறோஜினிதேவி, மற்றும் ரவீந்திரன் நளாயினி(சுவிஸ்), மகாலிங்கம் சாந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற தம்பிஐயா சசீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரி அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
யனுஷாரா, ஜதுஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.