திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊறணியை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை மரியதாஸ் அவர்கள் 07-01-2019 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பிள்ளை பிரான்சிக்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ரீட்டா பொன்னரியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜன்(இலங்கை), ரஜனி(சுவிஸ்), ரமணி(கனடா), ரமேஸ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், இன்பம் மற்றும் ரேமன், மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளினி(இலங்கை), நெவின்ஸ்(சுவிஸ்), உதயகுமார்(கனடா), சுபா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டெனி, டெனு, சதுசிக்கா, ஜெசித்தா, ஜெனசி, ஜெருசன், ஜெமிலியா, ஜெனலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நீங்கள் எங்களுக்குக் கிடைத்த தங்கம். அமைதியாக இளைப்பாறுங்கள்