
முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை இம்மானுவேல்அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், இறப்பியேல் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டொமினிக் ஜோசப்(புஸ்பன்- இலங்கை), செலஸ்ரின்பிள்ளை(செல்வராஜா- சுவிஸ்), டொன்பொஸ்கோ(அருள்- லண்டன்), காலஞ்சென்ற றெஜினோல்ட்(ஜேசு- நோர்வே), கொலஸ்ரிக்கம்மா(லண்டன்), இராயப்பு(ஆனந்தி- இலங்கை), எட்வீசம்மா(மைனா- ஜெர்மனி), அன்ரனி திமோத்தேயு(இலங்கை), கிறிஸ்ரி வதனகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி, கெங்காதேவி, இருதயராணி, விவியான், பத்மநாதன்(ராஜன்), ஜெயநிதி(சந்திரா), ஜெகசோதி, அஜித்தா, ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொய்சி, லெஸ்லி, றென்சிலி, ஜென்சிலி, ஜெனிதன், ஜெனுசியா, டென்சிதா, டொஸ்ரிகன், றெஜிந்தா திரேசா, டானியல், விக்டோரியா, பிரவீன், நிருஷாந், நிதுர்ஷிகா, டிலக்ஷனா, ஜெபிஷா, ஜெககஜேந்திரா, அனோஜிகா, அருண், அபிலாஸ், இசபெல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 24-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வற்றாப்பளை குழந்தையேசு ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வற்றாப்பளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
my heartfelt condolences to all for the loss of Kunchiiya .RIP