வவுனியா வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கோதண்டர் நொச்சிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சயம்பு இராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு ஒன்று மறைந்து விட்ட போதிலும்
அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் 1ம் ஆண்டு வீட்டுக்கிருத்தியம் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.