யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தென்மூலையை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அல்லும் பகலும் ஓயாமல்
கல்லும் முள்ளும் பாராமல்
பசியும் தாகமும் தீராமல்
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
உம் உழைப்பால் எமை வளர்த்திட்டவரே
சோர்வை கண்டதில்லை- உம் வாழ்வில்
நேர்மையை கண்டோம்- உம் உழைப்பில்
நம்பிக்கையை உணர்ந்தோம் உம் பக்தியில்
இறை விசுவாசத்தால் மிளிர்ந்தோம் உம் வளர்ப்பில்
உமக்காய் நீர் வாழ்ந்ததில்லை- உம்
வாழ்நாளெல்லாம் எமக்காகவே வாழ்ந்தீரே!
எம்மை விட்டு எங்கே சென்றீர்
அம்மாவிடம் செல்ல உமக்கு நாளும் வந்ததோ
அன்னையை இழந்து, தந்தையை இழந்து
அநாதைகள் ஆனோமே இன்று உம் பிள்ளைகள் நாம்
எமை தேற்ற யார் வருவரோ!
உம் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைவதாக
எமது அப்பாவில் பிரிவு செய்தி அறிந்து எமக்கு அனுதாபங்கள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
RIP