யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், இலங்கை, பிரித்தானியா லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் மஹேசவேலு அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மஹேசவேலு வேலுப்பிள்ளை(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
வசந்தன்(அமெரிக்கா), கலைரஞ்சன்(லண்டன்), முகுந்தன்(கனடா), தர்ஷினி(லண்டன்), ஹேமலதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாவதி, ரஞ்சிதமலர், பிரபாஜினி, அகிலன், சசிதரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
அவிக்னா, அஷ்வின்(அமெரிக்கா), கீர்த்திகா, ஹரிப்பிரியா(லண்டன்), அக்க்ஷினி, அபினன்(கனடா) விஷாகன்(லண்டன்), அபினவ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கணேசபிள்ளை, சோமசுந்தரம் மற்றும் பரமேஸ்வரி, பத்மநாதன், புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பங்களா வீதி, மீசாலை மேற்கு, மீசாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
பங்களா வீதி,
மீசாலை மேற்கு,
மீசாலை.