யாழ். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, இந்தியா சென்னை, மஸ்கட் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா சற்குருநாதன் அவர்கள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வதுரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கமலாதேவி, ருக்மணி, கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி செல்வதுரை சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரநாதன்(ரவீன்- ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுதர்ஷினி(சுதா) அவர்களின் அன்பு மாமியாரும்,
நிலா, தரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கங்காதரன், தாமரா, அன்னலட்சுமி (பவராசா), ஜெயலட்சுமி (சட்டநாதன்), வைத்திய கலாநிதி கமலநாதன்(வைத்திய கலாநிதி ஆனந்தி), அருமைநாதன் (அருந்தவராணி), மகாலட்சுமி(சுப்பிரமணியம்), ஜெகநாதன்(ரமணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-08-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Sathyabama Satkurunathan, born in Pungudutivu 11th ward and formerly a resident of Jaffna, Colombo and Muscat, passed away peacefully on Monday, 3 August 2026.
She was the beloved daughter of the late Thambi Ayah and Sivapakyam;
Beloved daughter-in-law of the late Selvadurai and Kanmani of Velanai;
Beloved sister of the late Kamaladevi, Rukmani and Karunanidhi;
Beloved wife of the late Dr. Selvadurai Satkurunathan.
Loving mother of Raveendranathan (Raveen),
Mother-in-law of Sutharshini (Sutha), and cherished grandmother of Neila and Darren, all of the United States.
Beloved sister-in-law of Annaluxmi (Pavarajah) Jeyaluxmi (Saddanathan) Dr. Kamalanathan (Dr. Anandasoundary) Arumainathan (Arunthavrani), Mahaluxmi (Subramaniam) and Jeganathan (Ramani).
Her funeral will be held at Jayaratne Funeral Parlour on Thursday, 6 August 2026 at 09:00am to 4:00pm.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Our heartfelt condolences to the entire family. "May you rest in peace " ஓம் சாந்தி 🙏