Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1949
இறப்பு 03 FEB 2021
அமரர் சத்தியதேவி சிவஞானசுந்தரம்
வயது 71
அமரர் சத்தியதேவி சிவஞானசுந்தரம் 1949 - 2021 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி சிவஞானசுந்தரம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(இளைப்பாறிய உப  அதிபர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானசுந்தரம்(முன்னாள் இளைப்பாறிய கச்சேரி நில அளவையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கீதாஞ்சலி(கொழும்பு), மைதிலி(கனடா), அமுதா(லண்டன்), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோரஞ்சன்(கொழும்பு), நவநீதன்(கனடா), நிமலன்(லண்டன்), பிரியஸ்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரங்கநாதன், சகுந்தலாதேவி, யோகநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திலகநாதன், சாரதாதேவி, சிவநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராதாகிருஷ்ணன், பராசக்தி, சரவணபவன், சிற்சபேசன், விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற வீரபத்திரபிள்ளை, பத்மாசனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிருத்திகா, அத்மிகா, ஆதவன், சேயோன், சேந்தன், உமையா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனை விழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்