யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Torontoஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாலதேவி பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஆகிவிட்டது,
எங்கள் இதயங்களில் என்றும்
நீங்காமல் குடியிருக்கும்
அன்னையே!
வார்த்தைகளில் அடங்காது எங்கள் துயரம்...
ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவில் வாழ்கிறோம்,
உங்கள் அன்பை உணர்கிறோம்...
உங்கள் வழிகாட்டுதல் என்றும் எங்கள் பாதையாகும்...
எத்தனை நாள் ஆனாலும்
உங்கள் பாசம் எங்களை விட்டு செல்லாது...
மறைந்தாலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய,
இறைவனை பிராத்திக்கிறோம் இந்த நாளில்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.