
யாழ். உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும், கல்வியங்காட்டை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவசரவணபவ அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சதாசிவம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராசா, அரியமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரஞ்சிதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜந், யசிகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கன்னிக்கா, சரவணியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயக்குருதாஸ், Dr.விமலகாந்தன், ஜெகன் மோகனதாஸ், காலஞ்சென்ற நாகநந்தினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரவீந்திரராசா, ரதிராணி, சிறீதரன், வசீகரன், ரூபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிஷ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.