1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சரவணபவ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10/12/2022
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்