10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி சோஸ்ட் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சாரங்கன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்
நீங்கள் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
தகவல்:
குடும்பத்தினர்
சாரக்கன் என்றும் உங்கள் நினைவுகளுடன் 😌ஓம் சாந்தி🙏🙏உங்கள் அனைவருக்கும் ஆழ்த்தனுதாபக்கள்💐😔