10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சதாசிவக்குருக்கள் சண்முகசுந்தரம்
வயது 66
அமரர் சதாசிவக்குருக்கள் சண்முகசுந்தரம்
1948 -
2014
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பருத்தித்துறை வியாபாரிமூலை இன்பருட்டியைப் பிறப்பிடமாகவும், சங்கானை அரசடிவீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவக்குருக்கள் சண்முகசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா உன்னை இழந்து
பத்து ஆண்டு ஆனாலும்
உந்தன் ஆசை முகம்,
நேசப்புன்னகை மறையவில்லை......!
உங்கள் நகைச்சுவையான கதைகளும்
அன்பான அரவணைப்பும்
செல்லமான கண்டிப்பும் என்றென்றும்
எங்கள் நினைவில் சொக்கா மாமா......
உங்களின் கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாடும் அன்பையும்
பல ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர் சொரிகின்றோம்......
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில்
பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள்
சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ.......
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்
I love you my daddy... Miss you so much my soul ❤️❤️❤️