Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 SEP 1979
இறப்பு 30 JUL 2026
திரு சதானந்தன் மயூரன்
வயது 46
திரு சதானந்தன் மயூரன் 1979 - 2026 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் மயூரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் அருமையானவரே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 31 நாட்கள் 
ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்

இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்..!

நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 06:30 மணியளவில் கீரிமலை புனீத தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைள் 29-08-2026 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வலம்புரி ஹேட்டலின் முதலாம் மாடி “சங்கலியன் மண்டபத்தில்” நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகைத் தந்து ஆத்ம சாந்திப் பிரர்த்தனையிலும் , அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
புலவனார் வீதி,
கல்வியாங்காடு,
யாழ்ப்பாணம், 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.