
யாழ். மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணநாதன் சஞ்ஜீகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க
ஆணிவேரென இருந்தாய் நீயே...!
மாரடைப்பால் காலனவன் இன்னுயிர் பறிக்க
சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதேனோ..!
காலனவன் கணக்கில் தப்பென்று சொல்லுவதா
இல்லை கண்களை குளமாக்க விதி செய்த விளையாட்டா..!
நலமுடனே வாழ்ந்து வந்தாய்
எல்லோர் மேலும் கருணை காட்டி வந்தாய்...!
எதிர் பாராமல் சட்டென்று இழந்து விட்டோம்
சோகத்தில் உன் அம்மா, மனைவி, பிள்ளைகள்,
உடன்பிறப்புக்கள் கதறியழ
சொல்லாமல் செல்ல என்ன தான் அவசரமோ..!
இனி எப்போ காண்போம் சஞ்சு உன்னை.....!
உமது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.......
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவுக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் Quartiertreffpunkt Kleinhüningen, Kleinhüningerstrasse 205, 4057 Basel, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.