

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சசிரேகா கோபிதன் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லையா மற்றும் ராகினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபிதன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கரம்பிடித்தவனை பாதியிலே தவிக்க விட்டு
மறைந்துபோன காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்பு மனைவியே!
கடைசிவரை இருப்பாய் என்று இருந்தேன்
ஆறுமாதமாய் பழைய நிலைமைக்கு
வருவாய் என எண்ணி
நடைபிணமாய் திரிந்தேன்
ஆனால் கடைசிவரை என்னை நடைபிணமாய்
ஆக்கிவிட்டு போனதேனோ!
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
மூத்த மருமகளாய் எங்கள் வீட்டிற்கு வந்த தெய்வமே
எந்தன் உயிர்போனால் தான் உம்மை(கோபி) விட்டு
பிரிவேன் என மச்சாளிடம் சொன்னதை நிறைவேற்றிவிட்டாய்...
எங்களுடன் வாழ உமக்கு கொடுத்துவைக்கவில்லை...
கொடிய வியாதி வந்து உன்னை
பாதியில் எங்களை விட்டு பறித்ததேன்...
உன்னைப் போன்ற தெய்வத்தை
எந்த ஜென்மத்தில் நாங்கள் இனி காண்போம்...
என்றும் எங்கள் நினைவில் வாழ்வாய்...
உன் பிரிவால் வாடும்
அம்மா, மாமி, கணவர்(கோபி),
மச்சான்மார்கள், மச்சாள்மார்கள், சகோதரர்கள்...!
நிகழ்வுகள்
- Sunday, 19 Oct 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 19 Oct 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details