சசிதரன் அவர்கள் 1978 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மகாஜனக் கல்லூரியின் துடுப்பாட்டக் குழுக்களின் அணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு சிறந்த முறையில் பெறு பேறுகள் பெற்றுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . விருந்தோம்பலுக்கும், கலகலப்புக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த, எல்லோராலும் அன்புடன் அறியப்பட்ட சசீதரன், கல்லூரியின் மெய் வல்லுனர் போட்டிகளிலும் இதர நிகழ்வுகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர். மேலும் நண்பர்களுடன் ஒன்று கூடல்களை ஒழுங்கு செய்வதிலும் அவர்களை மகிழ்விப்பதிலும் முன்னிலை வகித்து பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு மகாஜனக் கல்லூரி சமூகம் சார்பிலும், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Our deepest Sympathies to Rajini, Sharika, Shjabitha and Niro. So shocked and sad to hear your demise May his soul rest in eternal peace. Ohm Shanthi Shanthi. எங்கள் ஆழ்ந்த அநுதாபஙாகள் ! 💄