உடலோடி உயிர்நழுவ விழிக்கடையில் முத்துதிர வீழ்ந்த மொழி நாத்ததும்ப மடலோடிக் கண்வழியும் உனது பிரிவு அறிந்து உணர்வோடு உறவாடும் நட்பாய் உனை எண்ணி விழி நனைய கவிமாலை சூட்டுகிறோம் சசிஅண்ணா..! இறப்பினைக் கடந்து நிற்கும் காலங்கொள்ளா அறப்பொருள் நீ ஓய்ந்ததிவன் உயிரென்றும் தேய்ந்தவுயிர் இது என்றும் சொல்லமனம் ஒப்பலையே ..! கருவறை தொடங்கிய வாழ்வதன் கணக்கை கச்சிதமாய் முடிக்க கல்லறைப் பெட்டகம் காத்துக் கிடக்கிறது..! நீ மாண்ட கதை கேட்டு மனம் வெதும்பி நிற்கின்றோம் நண்பா மொழியுரைக்க நாதழும்பி விழிநீரை தெளிக்கின்றோம்..! ஆறலாம் உயிரிழந்தவனின் ஆகவடு மாறுமோ தேறுமா எங்கள் மனம் ஆறெலாம் கழுவினினும் அணையுமா உந்தன் அகவனல் உறைந்தோம் நண்பா..!!! உனது பிரிவறிந்து நீர் நிறை கண்கள் நீள் நிரை வடிக்க முடியாத பயணமொன்று முடிவானதாய் மரணத்தில் என்ற செய்தி அறிந்து உடைபட்டுப் போனோம் ..! விடியாத உந்தன் துயரத்தில் பகிர்வுறுகின்றோம் சகோதரி ஆனாலும் உனது கணவன் எம்மை விட்டு வெகு தூரம் செல்லவில்லை எம்முடன் கூடவே ஜீவிக்கின்றார்..! ஒட்டுமொத்த துயரங்களையும் ஒற்றை நெஞ்சில் தாங்கிய படி தனக்கான இருப்பிடம் தேடி ஒற்றையடிப் பாதையிலே தனிப்பயணம் செல்லுகின்றான்..! ஆறாத துன்பம் ஈதெம் உள்ளத்தின் ஆற்றாத பேரிழப்பு மாமாங்கம் ஆனாலும் மாறாது மாறாதது நண்பனே உனதன்பு செத்தனன் என்று எம்மைச் செப்பிடச் சொல்லாதீர் எம் முன் இருந்த தெய்வமவன் இல்லை உண்டென்கின்ற வாதத்திற்கு அப்பாலவன்...! நினைவினிலே வாழும் நண்பனாய் உன்னை பொத்தி வைக்கின்றோம் பொல்லாத இதயமதில் ...! ஆற்றுவனோ நின் பிரிவை தேறவில்லை நண்பா ஆவியுண்ணும் பாவிக்குத்தெரியுமா நம் தோழன் படும் பாட்டை..! உயிர் நிறைந்த உடலிருக்க என்றும் உன்னருகில் நாமில்லையே என்ற வருத்தத்தில் வாடும் உந்தன் துயரில் பங்கு கொள்கின்றோம்...! கண்ணீருடன் தோழன் இராகவனும் மகாஜனா82 அணியினரும்
Our deepest Sympathies to Rajini, Sharika, Shjabitha and Niro. So shocked and sad to hear your demise May his soul rest in eternal peace. Ohm Shanthi Shanthi. எங்கள் ஆழ்ந்த அநுதாபஙாகள் ! 💄