

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை கொட்டிவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சர்வலோகலட்சுமி கனகசுந்தரம் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், கதிரவேலு, சின்னமாட்சி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்செல்வன், தயாழன், தர்மசீலன்,தமிழ்செல்வி, தவசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூலோகசிங்கம், சந்தானலட்சுமி, வீரலட்சுமி, வீரசிங்கம், விஜயலட்சுமி, இலங்கசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, யோகதாஸ், செல்வநாதன் மற்றும் வேதநாயகி அம்பாழ், கலாவதி, சந்தானசீலி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
விக்னேஸ்வரன், சீதா, பத்மா, செயகலாறாணி, கமலேஸ்வரி, மீறா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதுஷா, நிவேதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
றிசி, சிபி, தருண்றாஜ், துழசி, சாழ்ஸ் கறி, சில்வி, சில்வா, ஸ்ரெப்பன், இலக்கியா, கௌசல்யா, அகழ்யா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 86 ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் கொட்டிவாக்கம் சென்னை- 46 எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You left me beautiful memories. Your love is still my guide and thought. I cannot see you. You are always by my side.