மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சறோசா சிங்கநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
காலன் உனை அழைத்தாலும்
உன் நினைவுகள்
எம் மனதில் நீங்காதம்மா! உன் உருவம்
எம் நினைவில் நிழலாடுதம்மா!
தேம்பியழும் எங்களைத்
தேற்றிடவோ நீங்களில்லை!
வானிழந்த பயிரெனவே
வாடுகிறோம் நாமிங்கே !
ஆண்டவன் திருவடியில்
சேர்ந்து விட்ட உங்களாத்மா!
சாந்தி பெற வேண்டுமென
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இ. சிங்கநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும், எமது அன்புத்தாயாருமான திருமதி சறோசா சிங்கநாயகம் அவர்கள் 14-09- 2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் அடைந்த துயரச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும், கண்ணீர் அஞ்சலி பதாதைகள் மூலமாகவும் தமது அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் அனுப்பிய உள்ளுர், வெளியூர் அன்புள்ளங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயல் வீட்டார் மற்றும் இறுதிக்கிரியை வரை இரவு பகலாக எம்மோடு தோளோடு தோள் நின்று கருமம் ஆற்றிய அன்பு நெஞ்சங்களுக்கு எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-10-2023 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 முதல் பி.ப 02:30 மணிவரை நடைபெறவுள்ளது. அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Address:-
Sri Sathya Saibaba Centre.
5321, Finch Avenue East
Scaborough, ON MIS5W2
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் பிரிவால் துயர் அடைந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிக்கின்றோம் காசிப்பிள்ளை குடும்பம் லண்டன்