யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி யோகலிங்கம் அவர்கள் 24-05-2019 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, ஞானாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி அன்னம்மா(சிவகாமி அம்மன் கோவிலடி இணுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஷ், சறண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
விக்னேஸ்வரி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் தயாநிதி, காலஞ்சென்ற அரிகரன் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கனகலிங்கம், சிவலிங்கம், அஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரி, ஞானலிங்கம், சோதியலிங்கம், நவரெத்தினலிங்கம், நாகேஸ்வரலிங்கம், இராசேந்திரம், நந்தகுமார், மனோகரி, நிவா, உஷா, நஷீர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாதசுந்தரம் ஜெயதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are deeply saddened by the loss that you and your family have encountered. Our condolences.