யாழ். பருத்திக்கலட்டி சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி தணிகாசலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
ஈழத் திருநாட்டில் ஈகை உள்ளம் மிகு
ஆழ உழவுடனே அருந்தோட்டம் பலகொண்ட
பருத்திக் கலட்டியதாம் சுன்னாகப் பதியதிலே
விருந்தோம்பல் பண்பு மிகுந்து விளங்குகின்ற
தர்மலிங்கம் மாணிக்கம் தம்பதியின் தலைமகளாய்
வந்துதித்த அருஞ்செல்வம் சறோஜினிதேவியவர்
கல்விதான் பயின்று கவின்கலையும் மிகுவாக்கி
செல்வம் நிறைவாழ்வு சிறப்புடனே விளங்கிடவே
தனிகாசலம் தன்னை மணாளனாய்க் கைப்பிடித்து
அணிசேர்க்கப் பிள்ளைச் செல்வங்கள் தாம்பெற்று
அவர்கள் வாழ்வதுவும் அவனியிலே சிறக்கக் கண்டு
அன்புநிறை பேரப் பிள்ளைகளின் அணைப்புக் கண்டார்
ஆன்மீகம் மனம் நிறைந்து அழகாய் வாழ்கையிலே
வான்மீது உறைகின்ற வல்லவனாம் ஈசனவன்
தானழைத்தான் தன்தாள் பணிந்திடவே தேவியையே
மேதினியில் வாழ்வுதனை முடித்துச் சென்றுவிட்டீர்
ஏதினிமேல் உம்மைக் காணாது ஏங்குகின்றோம்
எம்மனதில் நிறைந்துவிட்டீர் நினைவுடனே வாழ்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
கணவர், பிள்ளைகள, மருமக்கள் பேரப்பிள்ளைகள்.