1ம் ஆண்டு நினைவஞ்சலி


செல்வி சரோஜினிதேவி சரவணமுத்து
1947 -
2024
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:15/02/2025
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே!
ஆருயிர்த் தெய்வமே!
அகிலத்தை விட்டு ஆண்டவன் அடி சேர்ந்து
ஓராண்டு துன்பத்தின் விளிம்பில் நின்று
துடிக்கின்றோம் எங்கள் அக்கா
எங்கேயென்று தேடுகின்றோம் அக்கா
அன்பாய் அரவணைத்த அன்னைமடி எங்கே?
ஆறுதல் சொல்லும் வார்த்தை எங்கே?
என்றென்றும் புன்னகை பூத்த பூ முகம் எங்கே?
இனிக்க இனிக்க கதை பேசும் அழகு எங்கே?
ஆலமரம் போல் உறவுகளைத் தாங்கி
தழுவிய கைகள் எங்கே அக்கா?
எங்களை அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாட்கள் எங்களை விட்டு
நீண்ட தூரம் நீங்கள் சென்றாலும்
ஆறாதம்மா உங்கள் பிரிவுத்துயர் - ஆறாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்.