யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினி சுந்தரலிங்கம் அவர்கள் 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(குண்டர்) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயணன், துளசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர், பிறேமலதா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம்(சிற்று), சந்திராதேவி(சந்திரா), காலஞ்சென்ற வரதராசன்(வரதன்), ஜெகசோதி(சோதி), வசந்தா, ரகுநாத்(ரகு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டர்மிக்கா, சைந்தவி, நிருசஜன், சிவநயா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 150 நெடுங்குளம் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
You will be always remembered,the good times we shared over the years living in Nedunkulam Road Ariyalai Jaffna.RIP.