

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோஜாதேவி சிவபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் திருநாவுக்கரசு, துரைரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேலு சபாரட்ணம், மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாரட்ணம் சிவபாலன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷிதா(நிர்வாக உத்தியோகத்தர், கட்டடங்கள் திணைக்களம்), ஹம்ஷிதா(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஞானவேல்(செயலாளர், வேலணைப் பிரதேசசபை), தீபன்(பொறியியலாளர், சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லங்காதேவி சிவராசா(ஓய்வுநிலை ஆசிரியை), திருநாவுக்கரசு சிவகுமாரு(நியூசிலாந்து), காலஞ்சென்ற சுசிலாதேவி, திருநாவுக்கரசு ராஜ்குமார்(பிரான்ஸ்), சுதர்சினி பரந்தாமன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவசேனா பாலகிருஸ்ணேஸ்வரன்(ஓய்வுநிலை ஆசிரியை), சிவயோகி தபோதநாயகம்(ஓய்வுநிலை ஆசிரியை), மாலதி நித்தியகீர்த்தி(அவுஸ்திரேலியா), சபாரட்ணம் உமாபாலன்(கனடா), பொன்னம்பலம் சிவராசா, காலஞ்சென்ற சிவகுமாரு ஞானேஸ்வரி, ராஜ்குமார் ஜெயரூபி, இலங்கையர் பரந்தாமன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரணவி, நர்த்தவி, பிரகதி, தர்மிக், கஜலக்ஷன், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பிரிவுச் செய்தி அறிந்த நேரம் முதல் எம் அருகிருந்து எம்மை ஆறுதல்படுத்திய அன்பு உள்ளங்களுக்கும், தேவார திருவாசகங்களை ஓதிப் பிரார்த்தித்தோருக்கும், மலர்வளையங்கள், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் மற்றும் பதாகைகள் மூலம் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் அளித்தவர்களுக்கும், இறுதிக் கிரியைகளுக்காக சகல ஒழுங்குகளையும் மேற்கொண்ட உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களுக்கும், தொலைபேசி, Tele-mail, சமூகவலைத்தளங்கள் ஊடாக துயர் பகிர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் புலம் பெயர் உறவுகளுக்கும், இறுதிக்கிரியை, அத்தியேட்டிக் கிரியைகளையும் சிறப்புற நடாத்திய குருமார்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது"
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
தற்போது கொரோனா தொற்றினால் நிலவும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக வீட்டுக்கிருத்திய நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்க முடியாமைக்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.
I have the utmost respect and gratitude for my teacher. She gave us all an equal playing field and I have never encountered a teacher like her since. She will always and forever remain in my heart....