யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜா தம்பிப்பிள்ளை அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(இளையதம்பி வாத்தியார்) தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை(ஓய்வுபெற்ற தபாலதிபர்) திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மனுநீதி லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனுநீதி புஷ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜினிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
பிறேமா, ஜெயசீலன், அனுஷ்யா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புப் பெறா மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.